- முகப்பு
- மாவட்டச் செய்தி
- வைகை அணையில் தண்ணீர் திறப்பு
வைகை அணையில் தண்ணீர் திறப்பு
கார்மேகம்
UPDATED: May 16, 2024, 12:36:12 PM
தேனி ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை காலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியது
பின்னர் நீர்வரத்து சீராக இருந்ததால் அணையின் நீர் மட்டம் 60 அடிக்கு குறையாமல் இருந்தது இருப்பினும் அவ்வப்போது அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது
அதன்படி கடந்த வாரம் அணையின் நீர் மட்டம் 57 கன அடியாக காணப்பட்டது இதற்கிடையே ராமநாதபுரம் சிவகங்கை மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்கும் வகையில் வைகை அணையில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது
அதன்படி 15 நாட்களுக்கு 3 கட்டங்களாக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது முதற் கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக கடந்த 10 ந்தேதி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது
இந்நிலையில் அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக மட்டும் கடந்த 5 நாட்களாக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது
இன்று வியாழக்கிழமை காலை முதல் சிவகங்கை மாவட்ட தேவைக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அதன்படி இன்று முதல் வருகிற 19 ந் தேதி வரை 4 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
தற்போது அணையின் நீர் மட்டம் 50 அடியாக உள்ளது என்பது குறிப்பிட தக்கது.