வைகை தண்ணீர் வரத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் அதிகாரிகள் தகவல்

கார்மேகம்

UPDATED: May 17, 2024, 10:20:25 AM

ராமநாதபுரத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் பெரிய கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு விட்டன வைகை தண்ணீர் வரவால் நிலத்தடி நீர் ஆதாரம் உயர வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததாலும் வைகை அணையில் இருந்து பலமுறை தண்ணீர் திறந்து  விடப்பட்டதாலும் மாவட்டம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் பெரும்பாலும் நிரம்பின

இந்த நீர் நிலைகளை பயன்படுத்தி விவசாயிகள் முதல் போகம் மட்டுமின்றி இரண்டாம் போக விவசாயத்திலும் ஈடுபட்டு அறுவடை செய்து முடித்துள்ளனர்

மேலும் நெல் தவிர மிளகாய் பருத்தி எள் போன்ற பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த பல நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது இதனால் நீர்நிலைகளில் இருந்த நீர் படிப்படியாக குறைய தொடங்கியது

கடும் வெயில் காரணமாக தற்போது 90 சதவீத நீர் நிலைகள் வற்றிவிட்டன  ராமநாதபுரம் பெரிய கண்மாய் முழு கொள்ளளவை எட்டி இருந்த நிலையில் வெப்பத்தால் நீர் வேகமாக குறைந்து குறைந்த அளவு தண்ணீரே உள்ளது

இந்நிலையில் வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி கடந்த 10- ந் தேதி முதல் 14- ந் தேதி வரை 5 நாட்களுக்கு 915 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது

இந்த தண்ணீர் பார்த்திபனூர் வந்தடைந்து அங்கிருந்து படிப்படியாக முன்னேறி பறமக்குடியை தாண்டி ராமநாதபுரத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை மாலைக்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வைகை ஆற்றுப் பகுதியில் கடும் வெயில் காரணமாக கால்வாய்கள் காய்ந்து  கிடப்பதால் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை மணல் உறிஞ்சி எதிர்பார்த்த அளவு தண்ணீர் வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது

915 மில்லியன்‌ கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு எந்த அளவிற்கு தண்ணீர் வந்து சேரும் என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது

தண்ணீர் திறந்து விடப்படுவது நின்று விட்டாலும் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் குறைந்தது ஒரு அடி தண்ணீரையாவது தேக்கி விட வேண்டும் என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வறண்டு போன நீர்நிலைகளில் நீர் ஆதாரம் மேம்படும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

  • 1

VIDEOS

Recommended