- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ராஜபாளையம் ஆட்டோ கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பலி மூன்று பேர் படுகாயம்!
ராஜபாளையம் ஆட்டோ கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பலி மூன்று பேர் படுகாயம்!
அந்தோணி ராஜ்
UPDATED: Sep 1, 2024, 6:08:35 AM
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் அருகே சங்கரன்கோவில் சாலையில் உள்ள முதுகுடி கிராமத்தில் வைத்து கார் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணாநகரை சேர்ந்த ஆட்டோ ஒட்டி சென்ற கோவிந்தரராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் உயிரிழந்த கோவிந்த ராஜின் மாமா பரமாத்மா வயது 61, அவரது மனைவி பழனியம்மாள் 56, இவர்களது மகள் கோகிலா வயது 32 ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
Latest District News in Tamil
சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
Accident News

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு