- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ராணுவத்தில் வீர மரணம் அடைந்த ராஜபாளையத்தை சேர்ந்த ஹவில்தார் மனைவியிடம் பூனே ராணுவ அதிகாரிகள் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினர்.
ராணுவத்தில் வீர மரணம் அடைந்த ராஜபாளையத்தை சேர்ந்த ஹவில்தார் மனைவியிடம் பூனே ராணுவ அதிகாரிகள் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினர்.
அந்தோணி ராஜ்
UPDATED: Apr 25, 2024, 1:16:45 PM
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழராஜபுரம் தெருவை சேர்ந்தவர் சாமி கண்ணன்.
இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2004 ஏப்ரல் 1ஆம் தேதி அசாம் மாநிலத்தில் உல்ஃபா தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்தார்.
இவரது இறப்புக்கு பின்னர் வீர தீர செயலுக்கான சவுரியா சக்ரா விருது இந்திய அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
இதுபோல் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக ராணுவ உளவுத் துறையின் லெப்டினன்ட் ஜெனரல் பிரதீப் குமார் சாஹல் அறிவுறுத்தலின்படி ராணுவ உளவுத்துறை தொடங்கப்பட்ட நவம்பர் ஒன்றாம் தேதி வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரை புனேவுக்கு வரவழைத்து கடந்த ஆண்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத வீரர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக ஹவில்தார் சாமி கண்ணன் வீட்டுக்கு வந்த புனே இராணுவ உளவுத்துறை மேஜர் பொற்செல்வன், சுபேதார் சுரேஷ் ஆகியோர் சாமிக்கண்ணு மனைவி பாண்டி லட்சுமியிடம் மரியாதை சான்றிதழ் வெள்ளி பதக்கம் நினைவு பரிசு உடை மற்றும் வெள்ளி பிள்ளையார் சிலை ஆகியவற்றை வழங்கி கௌரவித்தனர்.