- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பழவேற்காடு மீன்வளத்துறை அலுவலகம் முன்பு சிதறி கிடக்கும் மதுபான பாட்டில்கள்.
பழவேற்காடு மீன்வளத்துறை அலுவலகம் முன்பு சிதறி கிடக்கும் மதுபான பாட்டில்கள்.
L.குமார்
UPDATED: Aug 13, 2024, 11:48:42 AM
திருவள்ளூர் மாவட்டம்
சுற்றுலா பயணிகள் மற்றும் மீன் வியாபாரம் பழவேற்காடு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு பழவேற்காட்டில் மீன் ஏலக்கடம் அருகில் மீன்வளத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மீன் வாங்குவதற்கும் மீன் விற்பதற்கும் இங்கு வந்து செல்கின்றனர்.
மேலும் பழவேற்காடு பகுதி சுற்றுலா மையம் என்பதால் இங்கு உள்ள அழகிய இடங்களை காண்பதற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
மீன்வளத்துறை
இந்த நிலையில் மீன்வளத்துறை நுழைவாயில் அருகில் குடிமகன்கள் மது பாட்டில்களை குடித்துவிட்டு அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் ஏராளமான மது பாட்டில்கள் அப்பகுதியில் சிதறி கிடக்கிறது.
மேலும் மீன் கழிவுகள் குப்பை கூளங்கள் என துர்நாற்றத்துடன் அப்பகுதி முழுவதும் நோய் தொற்று பரவக்கூடிய அபாய நிலையில் காணப்படுகிறது.
Latest Thiruvallur News
மது பாட்டில்களை மது பிரியர்கள் போதையில் உடைத்து விடுவதும் உடைத்த மது பாட்டில்களின் கண்ணாடி துகள்கள் அப்பகுதி வழியாக செல்வோர் கால்களை கிழித்து ரத்தம் சொட்ட சொட்ட நடந்து செல்வதும் வாடிக்கையாகி வருகிறது.
மேலும் உடைந்த மது பாட்டில்களால் அப்பகுதியில் மது பிரியர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு தாக்குதலில் ஈடுபடும்போது பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
மீனவர்கள்
மீனவர்கள் கால்களில் உடைந்த மது பாட்டில்கள் குத்தி கிழித்தால் அவர்களால் ஒரு வாரத்திற்கும் மேலாக மீன் பிடிக்க செல்ல இயலாது இது போன்ற பெரும் அவதிகளை ஏற்படுத்தும் வகையில் மது பாட்டில்கள் இங்கு சிதறி கிடக்கின்றன.
இது போன்ற நிலையில் மீன்வளத்துறை அலுவலகம் எதிரிலேயே மது குடிப்பதும் மது பாட்டில்களை அங்கேயே வீசி எறிந்து விட்டு செல்வதுமாக இது தொடர்கதையாக இருப்பதால் மீன்வளத்துறை அதிகாரிகள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.