கிராமப்புறங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை.

ஜெயராமன்

UPDATED: Apr 18, 2024, 2:50:00 PM

பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நாளைய தினம் (19.4.2024) நடைபெறவுள்ளது. 

திருவாரூர் மாவட்டத்தில் 166.திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி, 167.மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, 168.திருவாரூர் சட்டமன்ற தொகுதி, 169.நன்னிலம் சட்டமன்ற தொகுதி என நான்கு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது.

நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 510556 ஆண் வாக்காளர்களும், 535857 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.  

திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதிகள் என நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1183 வாக்குசாவடிகள் உள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 72 பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. 

இதனையடுத்து திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 308 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுவதனை திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பார்வையிட்டார்.

அப்போது கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ப்ரியங்கா உடனிருந்தார்.

மேலும் நகரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் தொட்டிகள் மற்றும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கிராமப்புறங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செய்து உள்ளார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது வெயில் காலம் என்பதால் அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச்சாவடிகளில் உடனடியாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்க ஏதுவாக பந்தல் அமைத்து தர வேண்டும் அதேபோல் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

  • 1

VIDEOS

Recommended