- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சிக்கராயபுரம் ஊராட்சியில் 11 வது வார்டில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.
சிக்கராயபுரம் ஊராட்சியில் 11 வது வார்டில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.
சுந்தர்
UPDATED: May 20, 2024, 9:27:50 AM
குன்றத்தூர் ஒன்றியம், சிக்கராயபுரம் ஊராட்சி 11 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்து அந்த பகுதி மக்கள் திடீரென ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில் :
சிக்கராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் ஊராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் முறையாக குப்பைகளை சேகரிப்பதில்லை மழைநீர் கால்வாய்களை தூர் வாருவது இல்லை குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை எனவும் இரவு நேரங்களில் தண்ணீர் விடுவதும்,
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடுவதாலும் அதனை பிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் தனியார் வாகனங்களில் எடுத்து வரப்படும் குடிநீரை காசு கொடுத்து வாங்கி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதாரமற்ற முறையில் இருக்கும் இந்த பகுதியால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்
இதனை ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் புதிதாக உருவாகிய நகர் பகுதிகளுக்கு மட்டும் அடிப்படை வசதிகள் அதிக அளவில் செய்து தரும் நிலையில் ஆதிதிராவிடர்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதியை ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த பகுதிக்கு எதிர் திசையில் கொல்லச்சேரி ஊராட்சி இருப்பதாகவும் தங்களுக்கு அடிப்படைத் தேவைகள் என்றால் அந்த பகுதிக்கு சென்று குடிநீர் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதையடுத்தும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.