நீதிமன்றத்தின் 2வது மாடியிலிருந்து குதித்த கைதி தற்கொலை முயற்சி.

கண்ணன்

UPDATED: Apr 15, 2024, 11:11:32 AM

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி மாலதி. கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கடந்த 2023ம் ஆண்டு மனைவியின் தலையில் கல்லை போட்டு திருமூர்த்தி படுகொலை செய்தார்.

இது தொடர்பாக பழனி தாலுகா போலீஸார் திருமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. திருமூர்த்தி தற்போது மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணைக்காக இன்று திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்திற்கு திருமூர்த்தியை மதுரை மத்திய சிறையில் இருந்து போலீஸார் அழைத்து வந்தனர்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இரண்டாவது மாடியில் மகிளா நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை  அப்போது போலீஸாரால் அழைத்துவரப்பட்ட திருமூர்த்தி, திடீரென 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

பலத்த காயமடைந்த திருமூர்த்தியை உடனடியாக போலீஸார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு திருமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பது இது 2வது முறையாகும்.

கடந்த மாதம் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஷாஜகான் என்ற கைதி, ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

  • 1

VIDEOS

Recommended