சிதம்பரத்தில் 81 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது .

சண்முகம்

UPDATED: Nov 9, 2024, 7:57:23 AM

கடலூர் மாவட்டம்

சிதம்பரத்தில் எட்டுக்கு மேற்பட்ட குளங்கள் சீரழிந்து பொதுமக்களால் ஆக்கிரமப்பட்டு இருந்தன 

இந்த நிலையில் சிதம்பர நகர மன்றத்தின் சார்பில் அனைத்து குளங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்கள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பஸ் நிலையம் அருகில் உள்ள குமரன் குலம் 81 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் குமரன் குளம் கட்டப்பட்டது

இந்த குளத்தை சுற்றி பூங்காக்கள் அமைக்கப்பட்டன குழந்தைகள் விளையாடுவதற்கு உபகரணங்கள் வைக்கப்பட்டன பொதுமக்கள் நடைபாதையாக செல்வதற்கு வழிகள் அமைக்கப்பட்டன

Latest Cuddalore District News Today In Tamil

இதேபோல் சிதம்பரம் மேம்பாலம் அருகில் ரயில் நிலையம் செல்லும் வழியில் சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான மற்றும் ஒரு குளம் சீரமைக்கப்பட்டது 

இதே போல் சிதம்பரம் பஸ் நிலையத்தில் நவீன கழிவறை கட்டடங்கள் கட்டப்பட்டன இன்று மாலை சிதம்பரம் நகர் மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார்  தலைமையில் குளங்கள் திறக்கப்பட்டு பொதுமக்கள் வாக்கிங் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்

நகர் மன்ற தலைவர் கூறுகையில் மிக விரைவில் சிதம்பரத்தில் சிங்கார சிதம்பரமாக மாற்றுவதற்கு அனைத்து குளங்களும் சீர் செய்யப்பட்டு பொதுமக்கள் உபயோகத்திற்கு கொடுக்கப்படும் என்றும்

Breaking News Today In Tamil

இந்த எட்டுக்கும் மேற்பட்ட குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் சேமிக்கப்படுகிறது இதனால் நீர் நிலை உயர்கிறது பொதுமக்களுக்கும் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் செய்ய வேண்டியது அரசின் கடமை என்று கூறினார் 

மிக விரைவில் நான்கு குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன மீதி உள்ள நான்கு குளங்களும் மழை காலத்துக்குப் பின்பு சீரமைக்கப்படும் என்று கூறினார்.

இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் சிதம்பரம் நகராட்சி உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

 

VIDEOS

Recommended