- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மதுரவாயலில் வீண் தகராறு செய்து 2 பேர் மீது தாக்குதல் நடத்திய 6 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
மதுரவாயலில் வீண் தகராறு செய்து 2 பேர் மீது தாக்குதல் நடத்திய 6 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
ஆனந்த்
UPDATED: Nov 18, 2024, 6:52:11 PM
சென்னை
சென்னை தண்டலம் திருவிக நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (30). இவர் கடந்த 15ஆம் தேதி இரவு தனது நண்பர் ஒருவருடன் மதுரவாயல் அடுத்து நூம்பல் பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 6 இளைஞர்கள் பிரசாந்திடம் வீண் தகாராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால், பிரசாந்த் மற்றும் அவரது நண்பரை 6 இளைஞர்களும் கடுமையாக தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றனர்.
Latest Crime News Today In Tamil
இந்த தாக்குதலில் காயமடைந்த பிரசாந்த் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்ட பின்னர் மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீஸார், வீண் தகராறு செய்து தாக்குதல் நடத்திய 6 இளைஞர்களையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் தண்டலம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (26), சந்தோஷ் (24) (எ) பில்லா, விக்னேஷ் (21), அபினேஷ் (25), நூம்பல் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் (24) மறும் திண்டிவனத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (25) என்பது தெரியவந்தது.
Breaking News Today In tamil
இதில் பிரசாந்த் மற்றும் சந்தோஷ் குமார் மீது தலா 2 குற்ற வழக்குகளும், சந்தோஷ் மற்றும் விக்னேஷ் மீது தலா ஒரு குற்ற வழக்கும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் சிறையில் அடைத்தனர்.