- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவ- மாணவியர்கள் புகார் மனு அளிக்க வந்த சம்பவம், சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவ- மாணவியர்கள் புகார் மனு அளிக்க வந்த சம்பவம், சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாரியப்பன்
UPDATED: Jun 15, 2024, 5:46:50 AM
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட அரசடிக்காடு கிராமத்திற்கு போதிய பாதை வசதி இல்லாததால் காலம் காலமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர்கள் தனி நபர்களின் பாதையை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அந்த பாதையை நில உரிமையாளர்களான செங்கோடு குடும்பம் மற்றும் மாணிக்கம் குடும்பம் கம்பி வேலி அமைத்து பயன்படுத்தக் கூடாது என்று தடுப்பதாகவும்,
இதனால் வயல் பகுதியில் உள்ள தங்களது வீடுகளுக்கு சென்று வர முடியாமலும், விவசாய விளை நிலங்களுக்குச் செல்லவோ, விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வரவோ முடியாமலும், கல்வி நிலையங்களுக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் உரிய நேரத்தில் சென்று வர முடியாமலும் சிரமப்பட்டு வருவதாக குற்றம் சாட்டி, இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் புகார் மனு அளித்தனர்.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.
பள்ளி வேலை நேரத்தில் பாதை பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவ- மாணவியர்கள் புகார் மனு அளிக்க வந்த சம்பவம், சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேட்டி-ஷன்மதி பள்ளி மாணவி