- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருத்தணி அருகே ஆற்காடு குப்பம் ஊராட்சி மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.
திருத்தணி அருகே ஆற்காடு குப்பம் ஊராட்சி மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.
S.முருகன்
UPDATED: May 7, 2024, 11:22:37 AM
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா ஆற்காடு குப்பம் ஊராட்சி அருகிலுள்ள பங்களா தோட்டம் கிராமத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த பகுதியில் கடந்த 7- நாட்களாக பகல் நேரத்தில் மின்சாரம் இருப்பதில்லை என்றும் இரவு நேரத்தில் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பகல் நேரத்தில் மின்சாரம் இல்லாததால் இந்த பகுதியில் தற்போது 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கின்ற நிலையில் வீட்டில் வசிக்க முடியாமலும் குறிப்பாக கைக்குழந்தைகள் குழந்தைகளை வீட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியாமல் அவதிப்படுவதாகவும் குழந்தைகளுக்கு முதுகில் கொப்பளம் போல் வருகிறது
வெளியே சென்றாலும் அனல் காற்று வீசுகிறது பகல் நேரத்தில் அவதிப்படுவதாகவும் இந்த விடியா திமுக அரசு மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல் மின்சாதன பொருட்கள் டி.வி மற்றும் வீட்டிற்கு தேவையான மிக்ஸி கிரைண்டர் எதுவும் பயன்படுத்த முடியாததால் சமையல் செய்ய முடியாமல் அவதிப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஒரு வார காலமாக தினமும் மின்சார அலுவலகத்துக்கு சென்று பலமுறை கோரிக்கை வைத்தும் மின்சாரத் துறை அலுவலர்கள் செவி சாய்க்கவில்லை உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு மேல் எங்களால் பகல் நேரத்தில் மின்சாரம் இல்லாமல் வசிக்க முடியாது என்று கிராம மக்கள் முடிவு செய்து 100க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் கனகம்மாசத்திரம் இளநிலைப் பொறியாளர் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது மின்வாரிய அலுவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மேலும் அதே பகுதியில் காத்திருப்பு போராட்டமும் மேற்கொண்டனர்.
இந்தத் தகவலை அறிந்த கனகம்மாசத்திரம் காவல்துறையினர் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்த பெண்களிடம் சமரசம் பேசினர் உங்களுக்கு மின்சாரம் வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் உங்கள் கிராமத்தில் பழுது ஏற்பட்டுள்ள மின் மாற்றி விரைவாக சரி செய்து தரப்படும் என்று காவல்துறையினரும் மின்வாரிய அலுவலர்களும் உறுதி அளித்ததையடுத்து
அரசு எங்களுக்கு விரைவாக மின்சாரம் வழங்க வேண்டும் அப்படி மின்சாரம் விரைவாக வழங்கவில்லை என்றால் மீண்டும் பங்களா தோட்டம் பொதுமக்கள் இந்த அரசுக்கு எதிராக தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கடும் போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் காத்திருப்பு போராட்டமும் செய்த பெண்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.