- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தமிழகம் முழுவதும் பழுதடைந்துள்ள 2 லட்சம் மின்மீட்டர்களை மாற்ற உத்தரவு.
தமிழகம் முழுவதும் பழுதடைந்துள்ள 2 லட்சம் மின்மீட்டர்களை மாற்ற உத்தரவு.
பரணி
UPDATED: May 8, 2024, 7:20:53 AM
தமிழக மின்வாரியத் துக்கு வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என மொத்தம் 3.5 கோடிஇ ணைப்புகள் உள்ளன.
இந் நிலையில் , மின்இணைப்புகளில் பொருத்தப்பட்டுள்ள மீட் டர்களில் பழுது ஏற்பட்டுள்ளதால் மின்வாரியத் துக்கு வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், பழுதடைந்த மீட்டர்களை மாற்ற மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 25 ஆயிரத்து 632 மீட் டர்கள் பழுதடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பழுதடைந்த மீட்டர்களால் துல்லிய மான மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்க முடிவதில்லை.
இதனால், மின் வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அத் துடன், நுகர்வோருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படு கிறது. குறிப்பாக, பழுத டைந்த மீட்டர் நுகர்-வோர் பயன்படுத்தும் மின்சாரத்தைவிட அதிகமாக ரீடிங் காண்பித்தால் அதற்கான கூடு-தல் கட்டணத்தை நுகர்வோர் செலுத்த நேரிடும்.
இதனால், அவர்களுக்கு நிதிச் சுமை ஏற்படும். இந்நிலையில், பழுத டைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற பொறியாளர்க-ளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை தெற்கு வட்டத்தில் மிக அதிகபட்சமாக 36 ஆயி ரத்து 343 மீட்டர்களும், குறைந்தபட்சமாக கரூர் வட்டத்தில் 3,400 மீட்டர் களும் பழுத-டைந் துள்ளன.
இதேபோல், சென்னை வடக்கு கோட்டத்தில் 22,093 மீட்டர்களும், கோவை-வட்டத்தில் 7,089, ஈரோடு வட்டத் தில் 6,535, மதுரை வட்டத் தில் 23,023, திருச்சி வட் டத்தில் 22,880, திருநெல்வேலி வட்டத்தில் 27,716, வேலூர் வட்டத் தில் 25,463, விழுப்பு ரம்வட்டத்தில் 19,299, திருவண்ணாமலை வட் டத்தில் 12,465, தஞ்சாவூர் வட்டத்தில் 19,326 மீட்டர் களும் பழுதடைந்துள்ளன.
மேலும், எதிர்காலத்தில் மீட்டர் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க 20 லட் சம் மீட்டர்களை கொள்மு தல் செய்ய அண்மையில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.