• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருச்சி அருகே கிராம பொதுமக்கள் முறையாக தண்ணீர் வரவில்லை என காலி குடங்களுடன் சாலையில் சாலை மறியல்.

திருச்சி அருகே கிராம பொதுமக்கள் முறையாக தண்ணீர் வரவில்லை என காலி குடங்களுடன் சாலையில் சாலை மறியல்.

JK

UPDATED: Jun 21, 2024, 12:48:47 PM

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்துள்ள அட்டாளப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தண்ணீர் வழங்க 3மேல்நிலை நீர் தொட்டிகள் உள்ளன.

இருப்பினும் இவர்களுக்கு 15நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது என பொதுமக்கள் மேட்டுப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சாலை மறியலை கைவிடுமாறு கூறினர்.

பின்னர் தா.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஊராட்சி செயலாளர் ரகுநாதன் மற்றும் போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதில் உள்ள நிர்வாக குளறுபடிகள் காரணமாகவும், சிலர் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதன் காரணமாகவும், தண்ணீர் தங்களுக்கு சரியாக வருவதில்லை என பொதுமக்கள் கூறினர்.

இவை அனைத்தும் சரி செய்யப்படும், மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுபவர்கள் தாங்களே மோட்டாரை அப்புறபடுத்தி கொள்ள வேண்டும், இல்லை எனில் மோட்டார் பறிமுதல் செய்யப்படும், மேலும் அவர்களது குடிநீர் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும் என ஆணையர் குணசேகரன் தெரிவித்தார்.

மேலும் விரைவில் அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் முறையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

 

VIDEOS

Recommended