40 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய தொகுப்பு வீடு இடிந்து வயதான பெண்மணி படுகாயம் 

சண்முகம்

UPDATED: Oct 8, 2024, 8:15:45 PM

கடலூர் மாவட்டம்

ஸ்ரீமுஷ்ணம் அருகே கோதண்ட விளாகம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காமராஜர் தெருவில் அரும்பு (70) வயது பெண்மணி வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அவரது பழைய தொகுப்பு வீட்டின் மேற்கூரை அப்படியே உள்ளே இடிந்து விழுந்தது இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் அரும்பு சிக்கிக்கொண்டார்.

வீடு இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு கட்டிட இடிபாடுகளுக்கு உள்ளே சிக்கிக்  கொண்டிருந்த அரும்புவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் லேசான காயமுடன் அரும்பு உயிர்த்தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மழை இப்பகுதிகளில் பெய்து வரும் நிலையில் அதனால் முற்றிலும் வீடு சேதம் அடைந்து விழுந்துள்ளது.

அதனால் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுமே மீட்க முடியாத நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் அரசின் மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் அலட்சியம் காட்டாமல் அரும்புவுக்கு புதிய வீடு கட்டித்தந்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும்,

மேலும் இப்பகுதிகளில் இதேபோன்று உள்ள வீடுகளை கணக்கெடுப்பு செய்து முன்கூட்டியே வீட்டில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended