• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சேத்தியாத்தோப்பு அருகே சாலையை பெயர்த்துப் போட்ட  அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் சாலை அமைக்க கோரிக்கை வைத்தும் புறக்கணித்து வரும் வேதனை 

சேத்தியாத்தோப்பு அருகே சாலையை பெயர்த்துப் போட்ட  அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் சாலை அமைக்க கோரிக்கை வைத்தும் புறக்கணித்து வரும் வேதனை 

சண்முகம்

UPDATED: Jul 2, 2024, 4:22:00 AM

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே தென்பாதி கிராமத்தில் பள்ளிக்கூடத் தெரு சாலை இருந்து வருகிறது. இங்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு 

சாலையை பெயர்த்து போட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் இதுவரை சாலையை அமைத்து தரவில்லை என குடியிருப்பு வாசிகள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.

இப்பகுதியில் பள்ளியும் இருப்பதால் பள்ளி மாணவர்கள் குடியிருப்பு வாசிகள் சாலையை பயன்படுத்த முடியாமல் கடும் அவதி ஏற்பட்டுள்ளது.

தற்போது பெயர்த்துப் போட்ட சாலை இடுக்குகளில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் அவைகள் குடியிருப்பு வாசிகளையும், பள்ளி மாணவர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

குடியிருப்புகளில் வயதானவர்கள், உடம்புக்கு முடியாதவர்கள் என யார் நடந்தாலும் தடுக்கி விழுந்து காயங்கள் ஏற்பட்டு வருகிறது.

குடியிருப்பு பகுதி சாலையில் இப்போது இரு சக்கர வாகனமோ அல்லது அவசரகால வாகனமான ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனம் போன்றவை வர முடியாத நிலை உள்ளது.

நன்றாக இருந்த சாலையை பெயர்த்துப் போட்டுவிட்டு இப்போது எங்களுக்கு எதுவும் தெரியாது என ஒதுங்கிக் கொண்டுள்ள அதிகாரிகள், எப்போது சாலை போடுவீர்கள் என்று கேட்டால் அதற்கு மௌனம் காத்து வருகின்றனர்.

சாலை அமைப்பது குறித்து மாவட்ட நிர்வாகம், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் என பலரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதே நிலை நீடித்தால் இன்னும் சில தினங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த தெருவில் குடிநீர் பிரச்சனை, மின்கம்பிகள் தாழ்வாக செல்லும் நிலையும் இருந்து வருகிறது. 

அதனையும் சரி செய்ய வேண்டும் என அவர்கள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சாலைகள் மழைக்காலங்களில் கொடுமையான நிலையில் இருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended