• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • குறைபாடு உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது

குறைபாடு உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது

JK

UPDATED: Nov 16, 2024, 12:23:29 PM

திருச்சி

தமிழகம் முழுவதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச் சத்தை உறுதி செய் திட்டத்தின் அடிப்படையில் பயனாளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று காலை  திருச்சி உறையூர் மேட்டுத்தெரு அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஊட்டசத்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கே.என்.நேரு 

இதில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து பாலூட்டும் தாய்மார்களின் குழந்தைகளின்  ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் 50 பாலூட்டும் தாய்மார்களுக்கான பேரிச்சம்பழம், விட்டமின், டானிக், புரதச்சத்து பவுடர், அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணைய சரவணன், மேயர் அன்பழகன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஊட்டச்சத்து பெட்டகம்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நித்யா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காஞ்சனா கண்காணிப்பில் அங்கன்வாடி பணியாளர்கள் வீடுகள் தோறும் குழந்தையின் எடை, உயரம், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த வகையில் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended