விருப்பமில்லாத கிராம பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணைய தேவையில்லை.

JK

UPDATED: Aug 29, 2024, 12:14:02 PM

திருச்சி

சென்னையில் பருவ மழையை எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக, அமைச்சர் உதயநிதி தலைமையில் பல்துறைகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தற்போது மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை மாநகரத்தை பொறுத்தவரை, அறிவிக்கப்பட்ட பணிகளில், 95சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்து விட்டன.

மழை

சென்னை மட்டுமல்லாது, திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சி பகுதியிலும் முழுமையாக கழிவுநீர் வாய்க்கால்களை தூர் வாருவது உள்ளிட்ட பணிகளை விரைவாக செய்து வருகிறோம். இதற்கான நிதியை எங்களது துறை நிதியிலிருந்து பயன்படுத்திக் கொள்கிறோம்.

சென்னையை பொறுத்தவரை, சராசரியாக, 20 முதல், 25 சென்டிமீட்டர் வரை மழை பெய்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதற்கு மேல் மழை பெய்தால் எதிர்கொள்வது சற்று சிரமம் தான்.

அமைச்சர் நேரு

திருச்சி மாநகரப் பகுதி விரிவடையும்போது அருகில் உள்ள கிராமப் பகுதிகள் பாதாள சாக்கடை குடிநீர் உள்ளிட்ட வசதிகள் பெற முடியாமல் இருந்தன எனவே, அருகில் உள்ள கிராம பஞ்சாயத்துகளையும் திருச்சி மாநகராட்சி உடன் இணைத்து விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது 

இந்நிலையில் விருப்பமில்லாத கிராம பஞ்சாயத்துகள் மாநகராட்சி உடன் இணைய தேவையில்லை அவர்கள் நாங்கள் இணையவில்லை என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்தால் அவர்களை நாங்கள் இணைக்க மாட்டோம் அமைச்சர் நேரு திட்டவட்டம் என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended