• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மாணவர்கள் மீது அன்பு கடந்த கல்லூரியாக ஜி.ஆர்.டி விளங்கி வருவதாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாராயணசாமி பெருமிதம்.

மாணவர்கள் மீது அன்பு கடந்த கல்லூரியாக ஜி.ஆர்.டி விளங்கி வருவதாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாராயணசாமி பெருமிதம்.

ராஜ்குமார்

UPDATED: Jun 23, 2024, 1:26:55 PM

திருவள்ளூர் மாவட்டம் புதூர் பகுதியில் அமைந்துள்ள ஜி ஆர் டி பார்மஸி கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நமது நிலம் நமது சந்ததியின் எதிர்காலத்தை மீட்டெடுப்போம்

என்ற தலைப்பில் கருத்தரங்கில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி கலந்து கொண்டார்.

கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர் ஜி ஆர் டி கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களுடன் அன்புடன் விளங்கி வருவதாகவும்

மாணவர் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும் எனவும்

ஒவ்வொரு மாணவனுக்கும் வாழ்க்கையில் ஒரு இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என அவர் கூறினார்

கல்விச் அழியாத செல்வம் என்றார்.

கல்லூரிக்கு வருகை தந்த அவரை பேண்ட் வாத்தியங்கள் முழுங்க அவரை வரவேற்றனர் .

நிறுவனத்தின் தலைவர் கோபால் அவருக்கு பூங்கத்து கொடுத்து வரவேற்றார்.

நிகழ்ச்சி இறுதியில் சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழை வழங்கி கௌரவப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வலியுறுத்தும் மாணவர்கள் உடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சூழல் காக்கும் வகையில் நூறு மரச்செடிகள் நடும் பணியை தொடங்கி வைத்தார் .

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் ராஜேஷ் முதல்வர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended