• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருச்சியில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக புறக்காவல் நிலையத்தை மாநகர காவல் நிலையம் திறப்பு.

திருச்சியில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக புறக்காவல் நிலையத்தை மாநகர காவல் நிலையம் திறப்பு.

JK

UPDATED: Oct 18, 2024, 6:20:53 PM

திருச்சி மாவட்டம்

தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது முன்னதாக தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு திருச்சி மாநகரில் முக்கிய கடைவீதியாக உள்ள என் எஸ் பி சாலை சிங்காரத்தோப்பு பெரிய கடை வீதி சின்ன கடை வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வருகை தருவார்கள் எனவே அங்கு பாதுகாப்பு பணிக்காக ஒவ்வொரு ஆண்டும் புறக்காவல் நிலையம் என் எஸ் பி சாலையில் திறக்கப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என் எஸ் பி சாலையில் புற காவல் நிலையம் இன்று திறக்கப்பட்டது திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி புற காவல் நிலையத்தை திறந்து வைத்தார். 

தீபாவளி பண்டிகை

புறக்காவல் நிலையத்தில் திறந்து வைத்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் :

மலைக்கோட்டை, சிங்காரத்தோப்பு பெரிய கடை வீதி சின்ன கடைவீதி என் எஸ் பி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 185 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் 24 மணி நேரம் 200 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தீபாவளி நெருங்கும்போது இன்னும் அதிகமான போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுவார்கள். 

Breaking News Today In Tamil 

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு வரும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் வகையில் பெண் காவலர்கள் சாதாரண உடலில் தொடர்ச்சியாக பணியில் இருப்பார்கள். 

தீபாவளி பண்டிகைக்காக இந்த பகுதிகளில் தற்காலிகமாக தரைக்கடை அமைப்பவர்களுக்கு மாற்று இடம் ஏற்படுத்தி தருவது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தோடு கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

போக்குவதற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படாமல் இருப்பதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. இரவு 11:30 மணி வரை எந்தவித சரக்கு வாகனங்களும் இந்த பகுதிகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றார்.

 

VIDEOS

Recommended