• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 234 யை ரத்து" செய்ய சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது.

பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 234 யை ரத்து" செய்ய சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 3, 2024, 8:29:21 AM

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை சார்பில், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் உள்ள PTVS பள்ளி அருகே மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கதிரவன், ஜெய்சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு, "90 சதவீதம் பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 234 யை ரத்து" செய்ய வலியுறுத்தி கோரிக்கை முழக்கமிட்டனர்.

டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் கதிரவன் பேசும்போது, தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கை, பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அளவில் மட்டும், இடமாறுதல் கலந்தாய்வு நடக்கும் வகையில், திருத்திய கால அட்டவணையை உடனே வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பேட்டி - கதிரவன். டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளர்.

 

VIDEOS

Recommended