சாம்சங் நிர்வாகத்தை கண்டித்து அருகே 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

லட்சுமி காந்த்

UPDATED: Jul 2, 2024, 5:05:23 AM

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காந்தி சிலை அருகே, தொழிலாளர்களின் பிரச்சனைகளை சற்றும் கண்டுக் கொள்ளாத சாம்சங் நிர்வாகத்தை கண்டித்து 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் பன்னாட்டு தொழிற்சாலைகள் அதிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் நீர்வள்ளூர் ஆரியம்பாக்கம் கிராமத்தில் எஸ்.எச்.சி. என்ற எலக்ட்ரானிக் நிறுவனம் இயங்கி வருகின்றது . இதில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் சாம்சங் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயாரித்து அளித்து வருகிறது .

இந்நிலையில் இதில் கடந்த 15 வருடங்களாக பணிபுரிந்து வந்த 12 தொழிலாளர்களை திடீரென்று இந்த நிறுவனம் பணி இடை நீக்கம் செய்தது .இதனால் அவர்கள் தங்களது வாழ்வாதாரம் தடை படவே செய்வதறியாமல் அதிர்ச்சியுற்றனர்.

இந்த நிறுவனத்தில் தொழிற்சங்கம் துவக்கிய காரணத்தினால் நிறுவனத்தில் பணிபுரிந்த12 தொழிற்சங்க நிர்வாகிகளை நிர்வாகம் பணி இடை நீக்கம் செய்தது .

இதனால் பாதிக்கபட்ட 12 தொழிலாளர்களும் , தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவும், தொழிற்சங்க உரிமைகளை நசுக்க கூடாது எனவும், தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக் கோரியும், வலியுறுத்தி 13 வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு செய்து விட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை அன்று தொழிலாளர் நல வாரியத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படாததால்,  

சாம்சங் நிர்வாகத்தை கண்டித்து 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து 5 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றனர்.

சி ஐ டி யு மாநில செயலாளர் முத்துக்குமார் அவர்கள் பேசும்போது, தொழிற்சங்கம் அமைத்தால் அவர்களை பணியிட நீக்கம் செய்வதும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராமல் நிர்வாகம் அடம் பிடிப்பதும் தொடர்கதையாக உள்ளது. தமிழகத்தில் தொழிலாளர் நலத்துறை தூங்குகின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

பாக்ஸ்கான் போன்ற தொழிற்சாலைகளில் கூட திருமணம் ஆன பெண்களுக்கு வேலை இல்லை என்பது மிகவும் அபத்தமான செயல். இது போன்ற செயல்களை தமிழக அரசும் தொழிலாளர் நலத்துறையும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

தொழிலாளர் நல வாரியமும் தமிழக அரசும் உடனே தலையிட்டு தொழிலாளர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் வருகின்ற எட்டாம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நியாயம் கேட்டு ஊர்வலம் நடத்தப் போவதாக சிஐடி மாநில செயலாளர் இ.முத்துக்குமார் அறிவித்தார்.

பேட்டி. முத்துக்குமார்.சிஐடியு மாநில செயலாளர்.

 

VIDEOS

Recommended