கும்பகோணம் அருகே சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகளை தெறிக்க விட்ட எம் எல் ஏ

ரமேஷ்

UPDATED: Jul 2, 2024, 6:06:56 PM

கும்பகோணம் அருகே கொற்கை ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் திட்டத்தில் பயன்பெறும் வகையில் சிறப்பு கிராம சபை கூட்டம் சேவை மைய கட்டிடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், தலைமையில் நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் விதமாக 'கலைஞா் கனவு இல்லம்'என்ற திட்டம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கு அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குடிசையில் வசிக்கும் மக்களுக்கு புதிதாக வீடு கட்டி தரும் பொருட்டு 2024-25-ஆம் நிதியாண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் 2000-2001-ஆம் ஆண்டிற்கு முன்னர் கட்டப்பட்டுள்ள வீடுகளில் சீரமைக்க வேண்டியுள்ள வீடுகளை கொண்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீட்டு பழுதின் அடிப்படையில் சீரமைத்து தரும் பொருட்டு ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் திட்டம் 2024-25- ஆம் ஆண்டிற்கு செயல்படுத்தப்படுகிறத எனவே,

கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு இந்த இந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. என்று தெரிவித்தார். தொடர்ந்து அப்ப பகுதி சேர்ந்த பொது மக்களிடம் தங்களது குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கையில் பல்வேறு இடங்களில் குடிநீர் பைப் லைன் இடத்தில் சில பேர் ஆக்கிரமித்து உள்ளனர். பழ இடங்களில் குடிநீர் செல்லும் பைப் லைன்கள் தரமானதாக போடப்பட்டதால் ஆங்காங்கே குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வெளியே செல்கிறது.

இதை பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் மற்றும் அரசு அதிகாரியிடம் தெரிவித்த போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை பல்வேறு தெருக்களில் சாலை வசதி இல்லை கொற்கை ஊராட்சியில் உள்ள குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. சில தெருக்களில் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை இதனால் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெறுகிறது.

கொற்கை ஊராட்சி முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும். உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு சட்டமன்ற உறுப்பினர் கிராம வளர்ச்சி வட்டார அலுவலர் ஆனந்தராஜிடம் பொதுமக்கள் தெரிவித்த அனைத்து பணிகளும் ஒரு வாரத்துக்குள் செய்து தரவில்லை என்றால் இந்த இடத்தில் இருக்க மாட்டாய் என்று தெரிவித்தார். 

 

VIDEOS

Recommended