- முகப்பு
- மாவட்டச் செய்தி
- அமைச்சர் ராஜ கண்ணப்பன் தன் மகன்கள் மூலம் 411 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார்
அமைச்சர் ராஜ கண்ணப்பன் தன் மகன்கள் மூலம் 411 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார்
கார்மேகம்
UPDATED: Oct 23, 2024, 11:56:27 AM
சென்னை
அமைச்சர் ராஜ கண்ணப்பன் தன்னுடைய மகன்கள்மூலமாக ஜி.எஸ்.டி சாலையில் ரூ.411 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்துள்ளதை குறித்தும் தன்னுடைய அதிகாரத்தை இன்றுவரை துஷ்பிரயோகம் செய்து அந்த அரசு நிலத்தை தன்னுடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களையும் இணைத்து இன்றைய தினம் புகாராக லஞ்ச ஒழிப்புத்துறை முதல்வர் துணை முதல்வர் தலைமைச் செயலாளர் வருவாய்த்துறை செயலர்களிடம் அனுப்பப்பட்டுள்ளது
இந்த அரசு நிலம் உடனடியாக மீட்கப்பட வேண்டும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் உள்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து பொது ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அமைச்சர் ராஜ கண்ணப்பன்
இந்த அரசு நிலம் ஜி.எஸ்.டி. சாலையில் ஆலந்தூர் மெட்ரோ விற்கும் நங்கநல்லூர் மெட்ரோ விற்கும் இடையே பி.எஸ்.என்.எல்.அலுவலகத்திற்கு அடுத்த படி உள்ள பரங்கிமலை கிராமம் சர்வே- எண்- 1353 - எண்- 12 ஜி. எஸ்.டி.சாலை இந்த நிலம்தான் என்பதற்கான வருவாய்த்துறை பதிவேடு நகலை புகாருடன் இனைத்துள்ளதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
அறப்போர் இயக்கம் புகார்
சர்வே- எண்- 1353 என்பது 4 ஏக்கர் 31.378 சதுரடி கொண்டது மற்றும் சர்வே- எண்- 1352 என்பது 12.964 சதுர அடி கொண்டது இவை இரண்டும் அரசு புறம்போக்கு நிலங்கள் என்று வருவாய்த்துறை பதிவேட்டில் உள்ளது என அறப்போர் இயக்கம் குறிப்பிட்டுள்ளது