- முகப்பு
- மாவட்டச் செய்தி
- விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்.
விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்.
அஜித் குமார்
UPDATED: May 12, 2024, 4:35:13 PM
தமிழக பொதுப்பணித்துறை , நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் எ.வ. வே கம்பன் சென்ற கார் விபத்தில் சிக்கியது, இதில் காயமடைந்த கம்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராகவும் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஆகவும் இருப்பவர் எ.வ.வேலு இவரது மகன் எ.வ.வே. கம்பன்.
இவர் திமுக மருத்துவரணி மாநில துணைச் செயலாளராகவும், அருணை மருத்துவ கல்லூரி துணைத்தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இன்று காலை திருவண்ணாமலை யில் அமைச்சர் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இவரும் பங்கேற்று விட்டு அருணை மருத்துவக் கல்லூரியிலிருந்து கம்பன் தனது வீட்டிற்கு அதாவது கீழ் நாச்சி பட்டு பைபாஸ் ரோடு உள்ள வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது ஏந்தல் பைபாஸ் சாலை சந்திப்பில் சென்ற அமைச்சரின் மகன் கம்பனின் காரும், வேட்டவலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு காரும் திடீரென மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு கார்களும் பலத்த சேதம் அடைந்தது. மேலும் அதில் பயணித்தவர்கள் காயம் அடைந்தனர். குறிப்பாக அமைச்சரின் மகன் கம்பன் மற்றும் அவரது டிரைவரும் காயம் அடைந்துள்ளனர்.
இதனை அடுத்து உடனடியாக அவர்களை மீட்டு அருணை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அத்தோடு விபத்து நடந்த இடத்தில் கம்பன் பயணிக்க காரின் ஒரு டயர் வெடித்து இருந்தது.மகன் மற்றும் எதிரில் காரில் வந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற தகவல் மட்டும் முதற்கட்ட தகவலாக வெளியாகி உள்ளது.
எதிரில் காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து முழுமையான தகவல் எதுவும் இன்னும் தெரியவில்லை.
போலீசார் தற்போது முழுமையாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சரின் மகன் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.