- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருச்சி அரசு மருத்துவமனையில் 1.62 கோடி திட்டங்களை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் 1.62 கோடி திட்டங்களை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.
JK
UPDATED: Nov 17, 2024, 7:31:09 AM
திருச்சி மாவட்டம்
தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயங்கி வந்த லிப்ட் பழுது ஏற்பட்டது. புதிய லிப்ட் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இப்பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் இன்று காலை புதிய லிப்ட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
திருச்சி அரசு மருத்துவமனை
தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சுமார் 1.62கோடி மதிப்பிலான மைக்ரோபயாலஜி ஆய்வக பயன்பாட்டிற்கான உபகரணம் மற்றும் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் ட்ரே உள்ளிட்ட திட்டங்களை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
அமைச்சர் கே.என்.நேரு
திருச்சிக்கு சித்த மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவமனை கொண்டுவர முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், விரைவில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், திருச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் மேம்பாட்டு வசதிகள் செய்து தரப்படும் என தெரிவித்தார்.