மகாத்மா காந்தி தேசியஊரக வேலை உறுதித் திட்டம் 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு.

கார்மேகம்

UPDATED: Jun 16, 2024, 9:15:04 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் 100 நாட்களைக் கடந்தும் பல ஊராட்சிகளில் ஊராட்சி  தலைவர்களின் உறவினர்களுக்கு தொடர்ச்சியாக 100 நாள் வேலை பணி வழங்குவதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு ஆம்ஆத்மி கட்சி சார்பில் புகார் மனு அளித்ததையொட்டி 100 நாள் வேலைத் திட்ட விசாரனை அலுவலர்கள் மேற்கொண்ட ( கள) ஆய்வின்படி 100 நாட்களுக்கு மேலாக வேலை செய்தவர்கள் கண்டறியப்பட்டு‌ அவர்கள் மீது விசாரனை நடைபெற்று வருவதாகவும் புதிய நபர்களுக்கு வேலை வழங்கும் பணியை மேற்கொண்டு வருவதாக 100 நாள் வேலைத் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


இது குறித்து ஆம்ஆத்மி கட்சி வழக்கரிஞர்‌ செல்வராஜ் கூறியதாவது இராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஊர்களில் இருந்து எங்கள் கட்சி பிரமுகர்களுக்கு 100 நாள் வேலை கிடைக்க வில்லை என்று பொதுமக்கள் சார்பில்‌ புகார் தெரிவித்ததை தொடர்ந்து

அது சம்பந்தமான ஆதாரங்களுடன் கலெக்டர் விஷ்ணு சந்திரன் அவர்களிடம் புகார் செய்தோம் அது குறித்து 100 நாள் வேலைத் திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 100 வேலை கிடைக்காத மாற்று திறனாளிகள் படித்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்றார். 

 

VIDEOS

RELATED NEWS

Recommended