எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்கள்.

L.குமார்

UPDATED: Sep 22, 2024, 9:30:29 AM

திருவள்ளூர் மாவட்டம்

தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடு கட்ட தேவையான கட்டுமான பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டுவரப்படுகிறது. 

இதில் எம் சாண்ட், பி- சாண்ட், ஜல்லி உள்ளிட்டவை ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு ஆந்திரா எல்லையான ஆரம்பாக்கம், பாதிரிவேடு வழியாக கொண்டு வரப்படுகிறது. 

Latest Thiruvallur District News 

இந்த நிலையில் கடந்த ஒருமாத காலமாக ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம், மாதவரம் லாரி உரிமையாளர்கள் லாரி மூலம் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி மற்றும் ஜிஎஸ்டி உடன் பொருட்களை ஏற்றி வரும்பொழுது தமிழக எல்லையான பாதிரிவேடு, ஆரம்பாக்கம் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தி விடுகின்றனர். 

Breaking News Today In Tamil 

இதனால் தமிழகத்தில் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக திட்டமிடப்பட்ட நிலையில் மாநில லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் தலைமையில் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்கள், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அண்ணாதுரையிடம் முறையிட்டனர். 

News TAMIL

மேலும் சத்தியவேட்டை ஒட்டி அமைந்துள்ள பாதிரிவேடு காவல் நிலைய சோதனைச் சாவடியின் அருகே 2000 லாரிகளை நிறுத்தி தடையை நீக்க நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனுவையும் வழங்கினார்கள்.

 

VIDEOS

Recommended