- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 240 கிலோ ஹான்ஸ் மற்றும் விமல் குட்கா காரில் கடத்தி வந்த 3நபர்கள் கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 240 கிலோ ஹான்ஸ் மற்றும் விமல் குட்கா காரில் கடத்தி வந்த 3நபர்கள் கைது
JK
UPDATED: Jul 4, 2024, 5:20:43 AM
திருச்சி அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட SIT பகுதியில் காவல்துறையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த TN 32 A 9340 என்ற எண்ணுள்ள Maruthi காரை சோதனை செய்தபோது, அதில் சுமார் 27 மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களான ஹான்ஸ் 150கிலோ, விமல் 90 கிலோ என மொத்தம் 240 கிலோ (மதிப்பு ரூ.4,00,000/-) குட்கா புகையிலை பொருள்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
உடனடியாக குட்கா, ஹான்ஸ் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குட்காவை கடத்தி வந்த திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த வேலுமணி என்பவரது மகன் செல்வகுமார்(26)மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், பழனிவேல், என்பவரது மகன் பட்டுகோட்டையை சேர்ந்த ஸ்ரீநாத் (39)ஆகியோரை கைது செய்தும், அவர்களிடமிருந்து 3செல்போன்கள் மற்றும் குட்கா புகையிலை பொருள்களை கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருள்களை கடத்தி விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.