திருச்சி அருகே மினி வேன் புளிய மரத்தில் மோதி பயங்கர விபத்து.

JK

UPDATED: May 21, 2024, 6:08:59 AM

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள குளத்துப்பாளையம் பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர்கள் 8பேர் பாலசமுத்திரத்தில் வாடகை ஆட்டோ எடுத்து நாமக்கல் மாவட்டம் அரூர் ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோவில் முப்பூசை திருவிழாவிற்கு சென்று விட்டு துறையூர் செல்வதற்கு திரும்பினர். திருச்சி மாவட்டம், துறையூர் பகுதி சேர்ந்த டிரைவர் ஈஸ்வரன் ஒட்டி வந்தார்.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்துள்ள பிடாரமங்கலம் ஊராட்சி குளத்து பாளையம் பேருந்து நிலையம் பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்த போது டிரைவரின் வேக கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தில் மோதியதில் டிரைவர் உள்பட 9பேர் காயம் ஏற்பட்டது. 

இதில் டிரைவரின் இருக்கையில் அமர்ந்த இரண்டு பெண்கள் வெளியில் எடுக்க முடியாமல் திணறியதால் 108ஆம்புலன்ஸ் மூலம் வென்டிலேட்டர் மூலம் சுவாசம் அளித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி காவல்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் வெல்டிங் மிஷின் கொண்டு ஆட்டோவை அழுத்தும் பொக்கலீன் இயந்திரம் மூலம் இரண்டு பக்கமும் அசைத்து பெண்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் 9 பேரையும் அனுப்பி வைத்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஈஸ்வரன்,  அபிஷேக் (18), கவிதா (44), மோனிஷ் ரூபன்(11), சாந்தி (55), கோபிகா, நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த சக்திவேல், மதுமிதா, திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்துள்ள பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த பாலாமணி(62), திருச்சி மாவட்டம் காட்டுப்புதூர் காவல் உதவி ஆய்வாளர் கருப்பண்ணன், ரவி மற்றும் 10 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அனைவரையும் அனுப்பி வைத்தனர். 

இதனால் காட்டுப்புத்தூர் நாமக்கல் சாலை சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended