- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஆற்றுபாலத்தில் தொங்கிகொண்டிருந்த மின்கம்பியை தவறுதலாக தொட்ட இளைஞர் பரிதாபமாக உயிரழந்தார்.
ஆற்றுபாலத்தில் தொங்கிகொண்டிருந்த மின்கம்பியை தவறுதலாக தொட்ட இளைஞர் பரிதாபமாக உயிரழந்தார்.
ஜெயராமன்
UPDATED: May 20, 2024, 5:29:21 AM
திருவாரூர் நேதாஜி சாலை பகுதியில் உள்ள ஓடம்போக்கி ஆற்றுபாலத்தில் பாக்கவாட்டில் இருந்துவந்த மின்கம்பியை தவறுதலாக தொட்ட இளைஞர் பரிதாபமாக உயிரழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவாரூர் நெய்விளக்கு தோப்பு தெரு பகுதியில் பழைய இரும்பு கடை நடத்திவருபவர் முத்து என்கிற மணிமாறன்(33). இவர் நேற்று நள்ளிரவு அவரது வீடு அருகாமையில் உள்ள ஓடம்போக்கி ஆற்றுபாலம் அருகே இயற்க்கை உபாதைகளை கழிக்க சென்றபோது ஆற்றுபாலத்தின் பக்கவாட்டில் சென்றுகொண்டிருந்த மின்கம்பியை தவறுதலாக தொட்டுள்ளார்.
அப்போது அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரழந்தார். இதுகுறித்து தகவல அறிந்த திருவாரூர் நகர காவல்துறையினர் உயிரழந்த மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காவல்துறை இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.
உயிரழந்த மணிமாறனுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண்குழந்தைகள், ஒரு ஆண் கைகுழந்தை என 3 குழந்தைகள் உள்ளன.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு