• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தனிநபர் பாலம் ஆக்கிரமிப்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலத்தை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்.

தனிநபர் பாலம் ஆக்கிரமிப்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலத்தை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்.

தருண் சுரேஷ்

UPDATED: May 18, 2024, 2:37:27 PM

கோட்டூரில் ஓராண்டு காலத்திற்கு மேலாக கட்டி முடிக்கபட்டபாலம் ஆக்கிரமிப்பை காரணம்காட்டி திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்வரப்படாத காரணத்தினால் பி,ஆர்.பாண்டியன் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் நடைப்பெற்றது.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் -இருள் நீக்கி சாலையில் 50 ஆண்டுகளாக பாலம் கேட்டு போராட்டம் நடத்தினர்.

கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்னதாக பாலம் கட்டப்பட்டு ஒரு மீட்டர் அகலத்தில் நெடுஞ்சாலைத்துறை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அதனை அகற்றிவிட்டு 10 கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டும் பாலம் திறக்கப்படாததால் போக்குவரத்து இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். 

மூன்று கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டும் மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை முறையிடப்பட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாதால் பாலம் போக்குவரத்து இன்றி முடக்கப்பட்டுள்ளது. 

இதனை உடனடியாக திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி சாலையில் கோட்டூர் பேருந்து நிலையம் அருகில் இருள்நீக்கி பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டண கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். இறுதியாக நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடு விரைவில் அகற்றபட்டு பாலம் பொதுமக்கள் போக்குவரத்துக்கு கொண்டுவரப்படும் என உத்திரவாதம் அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிகொள்ளபட்டது .

 

VIDEOS

Recommended