இலவச இருதய சிகிச்சை முகாம் -100 க்கு மேற்பட்டவர்கள் இருதய பரிசோதனை.

ஜெயராமன்

UPDATED: May 19, 2024, 6:21:36 AM

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், அரசு மேல்நிலை பள்ளியில் இன்று இலவச இருதய நோய் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

குத்தாலம் ஒன்றிய முன்னால் பெருந்தலைவர் நினைவில் வாழும் ப.தங்கையன் அவர்களின் 7-ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வசந்தம் அறக்கட்டளை சார்பாக தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவர்களுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த இலவச மருத்துவ முகாமை ம.தி.மு.க. மாநில செயலாளர் ஆடுதுறை முருகன் தொடங்கி வைத்தார்.

நிகழச்சியில் மதிமுக மாவட்ட செயலாளர் கொளஞ்சி, குத்தாலம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன்,குத்தாலம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம் சி பாலு,தி.மு.க பிரமுகர் வழக்கறிஞர் புகழரசன், மற்றும், தி.மு.க, அ.தி.மு.க, லயன்ஸ்,ரோட்டரி சங்க பிரமுகர்கள் கலந்து கொண்டு இந்த இலவச இருதய மருத்துவ முகாமினையும்,அய்யா ப.தங்கையன் அவர்களையும் புகழ்ந்து உரைத்தனர்.

மேலும், இந்த இருதய சிகிச்சை முகாமில் 30,000 ஆயிரம் மதிப்பிலான ஆஞ்சியோகிரம் இலவசமாக பார்க்கப்பட்டது தொடர்ந்து 100 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இருதய பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனை பெற்று சென்றனர் பரிசோதனை செய்து கொண்ட பல நோயாளிக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

 

VIDEOS

Recommended