மன்னார்குடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை வலியுறுத்தி ஜூன்13-ல் ஆர்ப்பாட்டம்.

தருண் சுரேஷ்

UPDATED: May 19, 2024, 6:39:21 AM

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல் படும் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நிர்வாகத்தை கண்டித்து, வரும் ஜூன் 13 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ் நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் அறிவித்துள்ளது.

இச்சங்கத்தின் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மண்டல துணைத் தலைவர் குரு. கோபால் ராமய்யர் தலைமை வகித்தார்.

மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கடந்த சில மாதங்களாக விவசாயிகள் கோரிக்கை மனுக்களை தமிழக அரசின் பார்வைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்வதால் கோரிக்கைக்கு தீர்மானம் தீர்வு காணப்படாமல் விவசாயிகள் பாதிப்புள்ளாகி வருகின்றனர்.

அதனால் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை கண்டித்தும் வரும் ஜூன் 13-ஆம் தேதி மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் சார்பில் பெருந்திரள் முழக்கப் போராட்டம் நடத்துவது, சங்கத்துக்கு புதிய கிளைகளை ஏற்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்டச் செயலர் டி.எம்.ஆர். தாஜூதீன், மாவட்டத் தலைவர் மாரிமுத்து மகேசன், மாவட்ட மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பராசக்தி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

சங்கத்தின் மாநிலத் தலைவர் கா. ராசப்பாலன் சிறப்பு அழைப்பாளராககொண்டார்.

 

VIDEOS

Recommended