இந்திய தர நிர்ணய நகர்வர்களுக்கு ஐ எஸ் ஐ மற்றும் ஹால்மார்க் குறித்த விழிப்புணர்வு பேரணி.

சுரேஷ் பாபு

UPDATED: Aug 7, 2024, 12:08:37 PM

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையில்  இந்திய தர நிர்ணய நுகர்வோர்களுக்கான ஹால்மார்க் ஐ. எஸ்.ஐ.குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஹால்மார்க் ஐ.எஸ்.ஐ.

இதில் உணவு மற்றும் பொது விநியோக பொருட்களுக்கு தர உரிமம் ஐ. எஸ்.ஐ.மற்றும் ஹால்மார்க் உரிமை இவற்றின் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் கலை பொருட்களுக்கான ஹால்மார்க்கின் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் நுகர்வோர் பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Latest Thiruvallur District News

ஹால்மார்க் மூன்று கூறுகளாக ஹால்மார்கிங் லோகோ கார்ட்டேஜ் நேர்த்தி தன்மை மற்றும் ஹால்மார்க் தனித்துவமான அடையாளம் இவற்றை சரிபார்க்க பி. ஐ. எஸ் .செயலியை பயன்படுத்துமாறும் கல்லூரி மாணவ மாணவியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையில் பதாகைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காமராஜர் சிலை வரையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேரணியாக சென்றனர்.

 

VIDEOS

Recommended