• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பொன்னேரி நடுவன் கிளைச் சிறையில் கட்டமைப்பு வசதிகள் குறித்து நீதிபதிகள் நேரில் ஆய்வு.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பொன்னேரி நடுவன் கிளைச் சிறையில் கட்டமைப்பு வசதிகள் குறித்து நீதிபதிகள் நேரில் ஆய்வு.

L.குமார்

UPDATED: Jun 12, 2024, 12:47:42 PM

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள நடுவன் கிளை சிறையில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர்கள் ஆன, மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா, மாவட்ட சட்ட பாதுகாப்பு குழு தலைவர் நீதிபதி சரஸ்வதி, மாவட்ட குற்றவியல் நடுவர் மோகன், ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது சிறையில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவியின் செயல்பாடு, மற்றும் சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், அதிகாரிகள் மற்றும் சிறைவாசிகளிடம் கேட்டறிந்தனர்,

பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா சிறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான அறிக்கை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பப்படும் என்றும், சிறைச்சாலைகளுக்குள் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டி மூலம் தெரிவிக்கப்படும் கைதிகளின் குறைகள் தீர்த்து வைக்கப்படும் எனவும்

மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா தெரிவித்தார், இந்த ஆய்வின்போது ஆவடி சாரக இணை ஆணையர் பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

 

VIDEOS

Recommended