• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மூணாறில் தொடர் மழையில் நிலச்சரிவில் சிக்கி பெண் உயிரிழப்பு காயம்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.

மூணாறில் தொடர் மழையில் நிலச்சரிவில் சிக்கி பெண் உயிரிழப்பு காயம்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.

ராஜா

UPDATED: Jun 26, 2024, 6:27:37 PM

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் இடுக்கி மாவட்டத்தில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இடுக்கி மாவட்டம் மூணாறில் கடந்த ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வந்த நிலையில் எம்ஜி காலனியில் நிலச்சரிவு ஏற்பட்டது,நிலச்சரிவில் சிக்கி பெண்ஒருவர் உயிரிழந்தார்.

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பலியானவர் மற்றும் காயம் பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக மூணார் TATAமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

MGகாலணியில் வசித்து வந்த குமார் என்பவரின் மனைவி மாலா 38 என்பவர் உயரிழந்தது குறிபிடத்தக்கது.  

தற்போது மழையின் அளவு அதிகமாக பெய்து கொண்டு வருகிறது முன்னேற்பாடுகள் குறித்து பணிகள் தீவிரம்.

நிலச்சரிவில் பெண் உயிரிழந்த சம்பவம் மூணார் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எம்.ஜி. காலனியில் ஏற்ப்பட்டமண் சரிவு காரணமாக மூணாறில் மூன்று நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன ஆர்.சி. சர்ச், ஆடிட்டோரியம் ஹால், சி.எஸ்.ஐ.சர்ச் ஹால், மார்சன்ட் அசோசியேஷன் ஹால் ஆகிய இடங்களில் முகாம்கள் தொடங்கப்பட்டது

காலனி பகுதியில் வசிக்கும் குடும்பங்களை பாதுகாப்பாக மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கேரளா வானிலை ஆய்வு மையம் இடிக்கி மாவட்டத்திற்கு தற்போது ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended