- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தமிழக கேரளா எல்லைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தமிழக கேரளா எல்லைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ராஜா
UPDATED: May 26, 2024, 9:13:57 AM
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளா எல்லை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
142 அடி கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 118.50 அடியாக உயர்ந்துள்ளது அணைக்கு வரும் நீர்வரத்து 2358 கன அடியாகவும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 100 கன அடியாகவும் இருக்கின்றது மேலும் அணையின் இருப்பு 2085 கனடியாக இருந்து வருகிறது.
கடந்த ஒரு வார காலத்தில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 2 அடிக்கு மேல் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் மழை தொடர்ந்து பெய்து வந்தால் நீர்வரத்து அதிகரித்து விவசாய நிலங்களுக்கு தேவையான நீர் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு.