• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • அரசு புறம்போக்கு நிலத்தை கையூட்டு பெற்றுக் கொண்டு தனி நபருக்கு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு.

அரசு புறம்போக்கு நிலத்தை கையூட்டு பெற்றுக் கொண்டு தனி நபருக்கு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு.

ராஜா

UPDATED: Jun 24, 2024, 11:51:19 AM

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா தேவாரம் பேரூராட்சிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தை தேவாரம் பேரூராட்சி நிர்வாகமும் தேனி மாவட்ட நிர்வாகமும் கையூட்டு பெற்றுக்கொண்டு தனிநபருக்கு தாரை வார்த்ததாக தேவாரம் பகுதி பொதுமக்கள் புலம்பி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி தேவாரம் பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரிய பரபரப்பு நிலவி வருகிறது.

தேவாரம் ஏழாவது வார்டு டி கே வி பள்ளி தெருவில் குடிநீர் வராமல் பொது மக்கள் பரிதவித்து வருவதாகவும் அதேபோல் 16 வது வார்டு ல் சிலேத்தம்மாள் என்பவரது வீட்டின் குடிநீர் வரவில்லை என பேரூராட்சி அணுகி கேட்டதற்கு ரூபாய் 500 லஞ்சம் பெற்றுக் கொண்டு இதுவரை சரி செய்யவில்லை எனவும் 

12 வது வார்டு செம்மொழி நகர் ஐயப்பன் கோவிலுக்கு மேற்கே மயாணம் செல்லும் சாலையில் உள்ள அரசு நிலத்தை தனி நபருக்கு தாரை வார்த்தது எவ்வாறு என கேள்வி எழுப்புகின்றனர்.

தேனி மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அவர்கள் துரை ரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தை மக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் அவர்களும் தேவாரம் பேரூராட்சி அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இல்லையேல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மக்களை திரட்டி போராட தூண்டாதே என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

 

VIDEOS

Recommended