தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்திட ஓ எஸ் எஸ் கோரிக்கை.

இரா.இராஜா

UPDATED: May 28, 2024, 12:35:55 PM

District News 

தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு மலிவு விலையில் குடிமைப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

ரேசன் கடைகளில் இருந்து இடைத்தரகர்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ள பொருட்களை பெற்று வெளி மாநிலங்களுக்கு கடத்திச் செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

Latest District News

குறிப்பாக ரேஷன் அரிசியை கடத்துவோர் அதிக அளவில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருவதோடு, ரேஷன் அரிசி கடத்துவோர் மீது கடுமையான நட வடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் அரிசி கடத்தல் தொடர்கதையாகவே உள்ளது.

இடைத்தரகர்கள் ரேஷன் கடைகளிடமிருந்து மூடை ஒன்றுக்கு 500 ரூபாய்வரை செலுத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய அரிசியினை பெற்று தரம் பிரித்து அவற்றை அருகில் உள்ள அரிசி ஆலைகளில் அரைத்து கோழி தீவனங்களாக மாற்றி வெளி மாவட்ட மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

ரேசன் அரிசி அரைக்கப்பட்டு குருணையாக கொண்டு செல்லப்படுவதனால் அரசு அதிகாரிகளால் முறையாக நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாகவும் பொதுமக்களுக்கு குடிமைப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

குடிமைப் பொருட்களை பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் விநியோகம் செய்யும் பொழுது எடை குறை வாகவும், மற்றும் விநியோகம் செய்யக் கூடிய பொருட்கள் போதிய இருப்பு இருந்தும் அவற்றை கள்ள சந்தையில் விற்க முற்படுவதால் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகின்றது.

அரசு ரேஷன் கடைகள் அனைத்தையும் கணினி மயமாக்கப்பட்டு கண்காணித்து வரும் போதிலும் இடைத்தரகர்கள், கடை விற்பனையாளர் மற்றும் எடையாளர்களால் பொது மக்களுக்கு சேர வேண்டிய பொருட்கள் அதிக லாபத்துடன் கள்ளச் சந்தையில் விற்கப்பட்டு வருகின்றது.

இவற்றை தடுக்கும் விதமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாயினும், கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகின்றனவா? என்பதனை அரசு துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்திட வேண்டுமாய் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களது தம்பியும் பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற உறுப்பினருமான  ஓ.சண்முகசுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

VIDEOS

Recommended