- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தவணைத் தொகையை பெற அஞ்சலகங்களில் சிறப்பு முகாம் 18-ம் தேதி தொடங்குகிறது.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தவணைத் தொகையை பெற அஞ்சலகங்களில் சிறப்பு முகாம் 18-ம் தேதி தொடங்குகிறது.
கார்மேகம்
UPDATED: Jun 15, 2024, 10:09:27 AM
பிரதமர் கிசான் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகள் 17 வது தவணை தொகையான ரூ. 2 ஆயிரத்தை அஞ்சலகங்கள் மூலம் பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 18 ந் தேதி முதல் 20 ந் தேதி வரை நடைபெறும் என ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்
மத்திய அரசின் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் ஜுன் 3 வது வாரத்தில் வழங்கப்பட உள்ள 17 - வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது
இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள் தபால்காரர் கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பே மெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறை வசதியை பயன்படுத்தி அருகில் உள்ள அஞ்சலகங்களில் கட்டணமின்றி பயன்பெறலாம்
பயோ மெட்ரிக் அங்கிகாரத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் இணைக்கப்பட்ட எந்தவொரு வங்கி கணக்கிலிருந்தும் அருகிலுள்ள அஞ்சலகங்கள் தாய்பால் காரர்கள் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் கட்டணமின்றி ரூ. 10 ஆயிரம் வரை பெற்றுக்கொள்ளலாம்
இதற்காக ஜுன் 20-ந் தேதி வரை சேவை வழங்கப்படும் அனைத்து அஞ்சலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இதே போல் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் முதியோர் ஓய்வூதியம் கைம் பெண் உதவித் தொகை மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை
ALSO READ | லஞ்ச வழக்கில் பெண் தாசில்தார் கைது.
மற்றும் அனைத்து சமூக பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் சிலிண்டர் மானிய பயனாளிகள் மத்திய மாநில அரசுகளின் அனைத்து நலத் திட்ட பயனாளிகள் ஏ.டி.எம். செல்லும் நிலையை தவிர்த்து அருகிலுள்ள அஞ்சலகங்கள் தபால்காரர் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் தங்களது வங்கி கணக்கிலிருந்து கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீர்த்தாரப்பன் தெரிவித்துள்ளார்.