- முகப்பு
- மாவட்டச் செய்தி
- 50 ஆண்டுகளாக இயங்கி வந்த எப்சி யூனிட்டை தேவகோட்டைக்கு மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
50 ஆண்டுகளாக இயங்கி வந்த எப்சி யூனிட்டை தேவகோட்டைக்கு மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
கார்மேகம்
UPDATED: Jul 27, 2024, 12:00:52 PM
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் இயங்கி வந்த அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான எஃசி யூனிட்டை கும்பகோணம் மேலாண்மை இயக்குனர் தண்ணிச்சையாக தேவகோட்டை டெப்போவுக்கு மாற்றப்பட்டது என்கிற தகவல் கிடைத்ததை அடுத்து
சி.ஐ.டி.யூ. சங்கம் சார்பில் முதலமைச்சர் போக்குவரத்துத்துறை அமைச்சர் போக்குவரத்து கும்பகோணம் மேலாண்மை இயக்குனர் காரைக்குடி பொது மேலாளர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இராமநாதபுரம் சட்டமன்ற உருப்பினர் இராமநாதபுரம் பாராளுமன்ற உருப்பினர் இராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் இராமநாதபுரத்தில் செயல்படும் எஃசி யூனிட்டை மாற்றக் கூடாது என்ற முறையில் கடிதம் அனுப்பப்பட்டது
CITU
மாவட்ட நிர்வாகமும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் முதலமைச்சர் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட எந்த துறையும் யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை
ஆனாலும் கும்பகோணம் மேலாண்மை இயக்குனர் தண்ணிச்சையான போக்கின் காரணமாக இரவோடு இரவாக தேவகோட்டைக்கு மாற்றிய தோடு ஊழியர்களையும் மாற்றி உத்தரவு பிறப்பித்து மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார் மேலாண்மை இயக்குனர் தனியார்க்கு எப்சி வேலைகளை வழங்குவதற்காக தான் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறு டெப்போக்கள் இருக்கிறது புதிதாக மூன்று டெப்போக்கள் உறுவாகுவதற்கான பணிகள் நடந்து வருகிறது
District News & Updates in Tamil
காரைக்குடி மண்டலத்தில் அதிகமான டெப்போக்கள் இருக்கும் மாவட்டம் இராமநாதபுரம் தான் இந்த நடவடிக்கையால் இராமநாதபுரத்தில் இருக்கும் டெப்போக்களின் உரிமை பறிபோய் இருக்கிறது எனவே தேவகோட்டைக்கு மாற்றப்பட்ட எப்சி டெப்போ யூனிட்டை மீண்டும் இராமநாதபுரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி
சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து மத்திய சங்கத்தலைவர் எஸ்.ஆர் ராஜன் பொதுச்செயலாளர் தெய்வ வீரபாண்டியன் துனைத்தலைவர் வி.பாஸ்கரன் கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.கருணாமூர்த்தி உள்ளிட்டடோறும் ஆட்டோ சங்கம் போக்குவரத்து சங்கம் அனைத்து துனை அமைப்பினரும் கலந்து கொண்டனர்
Latest Ramanathapuram District News in Tamil
இது குறித்து மண்டல செயலாளர் எம்.சிவாஜி தெரிவிக்கையில்
தேவகோட்டைக்கு மாற்றப்பட்ட எப்சி டெப்போ மீண்டும் இராமநாதபுரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆகஸ்ட் 15 க்கு மேல் 20 க்குள் அறிவிக்கப்படாத ஒரு தேதியில் அதிகாலை 4 மணிக்கு ராமநாதபுரம் அரசு புறநகர் பணிமனை முன்பு மறியல் செய்து பஸ்கள் வெளியேறாத வகையில் போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்துள்ளதாக கூறினார்.