• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தை மீறும் விசைப்படகு உரிமையாளருக்கு மீன்வளத்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் ஆதரவு.

மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தை மீறும் விசைப்படகு உரிமையாளருக்கு மீன்வளத்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் ஆதரவு.

கார்மேகம்

UPDATED: Jun 13, 2024, 11:38:27 AM

வருடம் தோறும் இரண்டு மாதங்கள் ஏப்ரல் 14 ல் துவங்கும் மீன்பிடி தடை காலம் ஜீன் 14 ந் தேதியுடன் முடிவடைவதையொட்டி 

மீன்பிடி ஒழுங்கு முறைப்படி ஜுன் 15 ந் தேதி காலையில் மீன்பிடி அனுமதி சீட்டு வாங்கிய பிறகு கடலுக்கு மீன்பிடிக்க செல்வதுதான் மீன்பிடி ஒழுங்கு முறையாகும்

ஆனால் ஆண்டு தோறும் இந்த தொழில்  ஒழுங்கு முறைச் சட்டம் மற்றும் ஒழுங்கு முறை நடவடிக்கைகள் மீறப்பட்டு மீன்பிடிக்க அனுமதி சீட்டு பெறாமல் மீன்பிடிக்க செல்லும் ஒரு சில விசைப்படகுகளுக்கு மீன்வளத்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் மறைமுக ஆதரவு அளிப்பதால் சில விசைப்படகுகள் மீன்பிடி ஒழுங்கு முறை நடவடிக்கைகளை மீறி கடலுக்கு செல்கின்றன.

இதனால் பாதிப்பிற்கு உள்ளாவது அந்த பகுதி மீனவர்கள் தான் என்பது வேதனைக்குறியதாக உள்ளது பொதுவாக சேர்ந்தாற்போல் ஒரு பகல் ஒரு இரவு என்பதுதான் விசைப்படகுகளுக்கான‌  மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம் ஆனால் அதற்கு மாறாக இரண்டு பகல் இரண்டு இரவு மீன்பிடிப்பில் ஈடுபடுவது அனுமதிக்கப்படாத ஒன்று இதனால் மீன்வளம் அழியும்

எனவே இதனை முறைப்படுத்த தமிழகத்தின் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதி சார்ந்த இராமநாதபுரம் தூத்துக்குடி புதுக்கோட்டை தஞ்சை திருவாரூர் நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் உள்ள மீனவர் சங்க பிரதிநிதிகளை அழைத்து அவர்கள் மூலமே இந்த தொழில் ஒழுங்கு முறையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை ஒப்படைக்க வேண்டும்

தவறும் பட்சத்தில் இது இலங்கை கடற்படை நம் நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பை தடுப்பதற்கு கூடுதல் வாய்ப்பாக அமைந்து விடும் என்பதையும் நம் மீனவர்களுக்கு உணர்த்திட வேண்டும் இதற்கு ஒத்துழைப்பு செய்ய தவறும்‌ படகுகள் மற்றும் உரிமையாளர்கள் மீது  முறையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதே அனைத்து தரப்பு மீனவர்களுக்கு மான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஆகும் இதனை மீன்வளத்துறை நிர்வாகம் செய்ய வேண்டும் என்று மீனவர்களும் கடல் தொழிலாளர் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

VIDEOS

Recommended