- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
கார்மேகம்
UPDATED: Jul 8, 2024, 5:49:17 AM
இளையான்குடி ஒன்றியத்தை சேர்ந்த கீழாய்க்குடி ஊராட்சியில் சுமார் 2500/ க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்
இந்த கிராமத்தில் இருந்து எமனேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஏராளமான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்
இந்த கிராமத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் நேரமான காலை 8- மணிக்கும் மாலை 5- மணிக்கும் இந்த பகுதிக்கு அரசு பஸ் இயக்கினால் மாணவர்களும் வேலைக்கு செல்வோரும் மிகுந்த பயனடைவர் எனவே இந்த பகுதிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் மாணவ மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப் பகுதி மக்கள் தெரிவிக்கையில் மாவட்ட கலெக்டர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு