- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கடல் தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யூ. தலைமையில் காவல்துறை துணைத்தலைவர் அலுவலகம் முன்பு போராட்டம்.
கடல் தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யூ. தலைமையில் காவல்துறை துணைத்தலைவர் அலுவலகம் முன்பு போராட்டம்.
கார்மேகம்
UPDATED: Jul 23, 2024, 1:54:47 PM
Ramanathapuram District News in Tamil
ராமநாதபுரத்தை தலைமையிடமாக கொண்டு நியூ செல்வி கோல்டு பைனான்ஸ் நிறுவனம் 16 கிளை அலுவலகங்களை திறந்து பல ஆயிரம் மீனவ மக்களிடம் அடகு வாங்கிய நகைகளை வேறு பல வங்கிகளில் மறு அடகு வைத்து கூடுதல் தொகை பெற்று மிகப் பெரும் நிதி மோசடி செய்த நியூ செல்வி கோல்டு பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் ஆர்.பி. கண்ணன் மீது மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ் சார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
இது சம்பந்தமாக பாதிக்கப்டவர்கள் 96 ஆயிரம் பேர் என்றும் இவர்களிடம் பெற்ற நகைகளை மறு அடகு வைத்து 300 கோடிக்கும் மேல் நிதி மோசடி செய்துள்ளதாக தெரியவருகிறது.
Latest Ramanathapuram News & Live Update
மேலும் தாங்கள் அடகு வைத்த நகைகளை திருப்ப வந்தவர்களிடம் வட்டியுடன் பணத்தைப் பெற்றுக் கொண்டு நகையை திருப்பி கொடுக்காமல் அதையும் சேர்த்து மோசடி செய்துள்ளனர்
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனுக்கள் கொடுத்து சுமார் 13 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை மோசடி செய்த உரிமையாளர் மீதும் அவருடன் உடந்தையாக செயல்பட்டவர்கள் மீதும் முறையான நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை செயல் இழந்து நிற்கிறதும் மோசடி குற்றம் செய்தவர்கள் பக்கம் போலீஸ் சார் உடந்தை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் புலம்புகின்றனர்.
News
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில் காவல்துறை மோசடி நிறுவனத்தில் உள்ள அடகு நகை பதிவேடுகள் மற்றும் கம்ப்யூட்டர்கள் ஆகிய வற்றை முழுமையாக கொண்டு வராமல் மோசடியாளர்களை காப்பாற்றியுள்ளது
போலீஸ்சார் தனது கடமையில் சரியாக நேர்மையாக செயல்பட்டு இருந்தால் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்று கொடுத்திருக்க முடியும்
Ramanathapuram News Paper Today
இதைச் செய்ய தவறும் சில போலீஸ்சாரால்த்தான் மோசடி நபர்கள் உருவாவதும் குற்றச் செயல்கள் அதிகரிப்பதும் தொடர் நிகழ்வாக இருக்கின்றது என்பது நிதர்சனம் எனவே சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்காக மாவட்ட காவல் துறை இனியேனும் செயல்பட்டு மோசடி நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வழி செய்யுமா போலீஸ்.