அகரம்சீகூர் அருகே 60 ஆண்டுகள் பழமையான சிதிலமடைந்த மின்மாற்றியின் அவலம்

மைக்கேல்

UPDATED: May 16, 2024, 12:15:42 PM

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே துங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட துங்கபுரம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்.எஸ் .8 மின்மாற்றி (டிரான்ஸ்பார்ம்) சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் அமைக்கப்பட்ட தாகவும் இந்த நிலையில் அந்த மின்மாற்றிலிருந்து சுமார் 15 மின் மோட்டாரர்களுக்கு மேல் இயங்கி வருவதாகவும் அதில் சுமார் 150 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகிறார்கள்.

அப்பகுதி விவசாய நிலங்களில் நெல். கரும்பு, எள்ளு,வேர்க்கடலை ,மக்காச்சோளம், போன்ற பயிர்கள் பயிர் செய்து வருவதாகவும் கூறினர் இந்த நிலையில் எஸ்.எஸ் .8 என்ற மின்மாற்றி பழுது அடைந்து கம்பிகள் தெரியும் அளவிற்கு சேதம் அடைந்து இருப்பதால் மின்மாற்றி கீழே விழும் அபாய நிலையில் உள்ளது .

இந்த மின்மாற்றி விழுந்தால் உயிர் சேதமும் அங்கே செல்லும் உயிரினங்கள் ஆடு, மாடு போன்றவை உயிரிழக்க நேரிடும். 

மேலும் அந்த மின் மாற்றியிலிருந்து வரும் மின் கம்பிகள் (ஒயர்கள்) பல இடங்களில் மிகவும் தாழ்வான நிலையில் தொங்கி கொண்டும், மின்கம்பங்கள் சாய்ந்தும் உள்ளது. இதன் விளைவாக நடந்து செல்பவர்கள் கை தூக்கினால் கை மோதும் நிலையிலும் உள்ளது.

இதனால் அங்கு விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக மின் அதிகாரியிடம் பலமுறை நேரிலும், கடிதங்கள் மூலமும் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் மேற்கண்ட மின்மாற்றியை மாற்றியும், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்தும் விவசாயிகள் குறையை தீர்க்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இந்த விவசாய நிலங்களுக்கு அருகிலே மின்சார வாரியம் உள்ளது என்று குறிப்பிடத்தக்கது. 

 

VIDEOS

Recommended