• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் வகையில் கொட்டிக் கிடந்த சிமெண்ட் கலவைகளை அகற்றிய காவலர்களுக்கு குவியும் பாராட்டு.

நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் வகையில் கொட்டிக் கிடந்த சிமெண்ட் கலவைகளை அகற்றிய காவலர்களுக்கு குவியும் பாராட்டு.

செ.சீனிவாசன் 

UPDATED: May 29, 2024, 12:17:23 PM

District News

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் காரைக்கால் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வாஞ்சூர் வெட்டாறு பாலம் அருகே சோதனை சாவடி அமைக்கப்பட்டு கள்ளச்சாராயம் கஞ்சா கடத்தல் குற்ற சம்பவங்களை கண்காணிக்கவும் பாதுகாப்பு பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றன

Live District News And Updates

இந்த நிலையில் இன்று அவ்வழியாகச் சென்ற சிமெண்ட் கலவை வாகனத்தில் இருந்து சிமெண்ட் ஜல்லி கலவைகள் எதிர்பாராத விதமாக கீழே சிந்தியது. எந்த நேரமும் விறுவிறுப்போடு காட்சியளிக்கக்கூடிய சாலையில் கொட்டப்பட்ட சிமெண்ட் கலவையால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தடுமாறி கீழே விழும் சூழ்நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் சோதனை சாவடியில் பணிபுரியும் இரு காவலர்கள் சாலையில் சிந்தியுள்ள சிமெண்ட் கலவைகளை கைகளாலும் அருகில் இருந்த பொருட்களை பயன்படுத்தியும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வாகன ஓட்டிகளின் மீது அக்கறை கொண்டு பெரும் விபத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் செயல்பட்ட இச்சம்பவம் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளை திரும்பிப் பார்க்க வைப்பது மட்டும் இன்றி தங்களுடைய பாராட்டுக்களையும் காவலர்களுக்கு தெரிவித்துச் சென்றனர்.

 

  • 2

VIDEOS

Recommended