• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருக்குவளை அருகே ஏர்வைக்காடு முதல் வாழக்கரை வரை குண்டும் குழியுமாக தகுதியற்ற சாலையின் அவலம்.

திருக்குவளை அருகே ஏர்வைக்காடு முதல் வாழக்கரை வரை குண்டும் குழியுமாக தகுதியற்ற சாலையின் அவலம்.

செ.சீனிவாசன்

UPDATED: May 20, 2024, 10:10:03 AM

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே மேல வழக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஏர்வேக்காடு முதல் வாழக்கரை வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்வதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது.

பள்ளி கல்லூரி மற்றும் விவசாய இடுபொருள்கள் வாங்குவதற்கும், மருத்துவமனை உள்ளிட்ட அவசிய தேவைகளுக்காக ஏர்வைகாடு, ராமன் கோட்டகம், மேலவாழக்கரை, வடக்குப்பனையூர், தெற்கு பனையூர், முப்பத்தி கோட்டகம், வல்லவ விநாயகர் கோட்டகம், நாட்டிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து இந்த சாலையை சுமார் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

சாலையின் நடுவே உள்ள பள்ளத்தால் பேருந்துகள் உள்ளே வராமல் பாதியிலே திரும்பி செல்வதாகவும் மழைக்காலங்களில் விபத்து ஏற்படும் என்ற அச்சத்திலே ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர், இதனால் கிராமத்திற்கு ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால் ஆட்டோ ஓட்டுநர்கள் பழுதான சாலையை காரணம் காட்டி வருவது கிடையாது என்கின்றனர்.

அடிக்கடி விபத்து ஏற்படுவதும் வாகனங்களில் செல்வோர் தடுமாறி வயல் மற்றும் வாய்க்கால்களில் விழுந்த சம்பவம் உள்ளதாக தெரிவிக்கும் கிராம மக்கள் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை அருகே உள்ள ஏர்வேக்காடு கிராமத்திற்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றன எனவே உடனடியாக தரமான சாலை அமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended