• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகை அருகே சிதிலமடைந்த சாலையை சீரமைக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சாலையில் நாற்றுநட்டு கிராம மக்கள் நூதன போராட்டம்

நாகை அருகே சிதிலமடைந்த சாலையை சீரமைக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சாலையில் நாற்றுநட்டு கிராம மக்கள் நூதன போராட்டம்

செ.சீனிவாசன் 

UPDATED: Jul 2, 2024, 2:14:58 PM

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஆந்தக்குடி ஊராட்சி தெற்கு தெருவில் சுமார் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . அப்பகுதியின் சாலை கடந்த 6 ஆண்டுகளாக சீர்மைக்காத காரணத்தால் பொதுமக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கிராவல் ஜல்லி கலந்து சாலை போடப்பட்டது. ஆனால் சாலை பணி முழுவதும் முடிக்காமல் பணிகள் நிறுத்தப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் பயன்படுத்தும் மாற்று சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

இதனால் பள்ளி மாணவர்களும், பெண்களும், பொதுமக்களும் சேற்றில் வழுக்கி விழுந்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுவது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். 

மேலும், நேற்று முன்தினம் பெய்த மழையால் சாலையில் சேறும், சகதியுமாக உள்ளதால் ஆத்திரமடைந்த பெண்கள் சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லாத காரணத்தால் சேரும் சகதியுமாக உள்ள சாலையில் அவதியடைந்து வருவதாக கூறியுள்ள மக்கள் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended