- முகப்பு
- மாவட்டச் செய்தி
- வேதாரண்யத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர்கவஜ் பாதுகாப்பு ஒத்திகை.
வேதாரண்யத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர்கவஜ் பாதுகாப்பு ஒத்திகை.
செ.சீனிவாசன்
UPDATED: Jun 19, 2024, 10:39:53 AM
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோரப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவஜ் ஆப்ரேஷன் பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் இரு தினங்கள் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று ஆறுகாட்டுத்துறை கடற்கரைப் பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி.சுந்தர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் வரலட்சுமி உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் சென்று ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு போன்ற மீனவ கிராமங்களில் 40க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தர வேண்டும் என முன்னெச்சரிக்கை செய்து வருகின்றனர்.
காலை துவங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு